[Arabic] [Chinese] [English] [Hebrew] [Hindi] [Romanian] [Spanish] [Tamil] [Help Translate This Page]

இயேசு யார்?

உலகத்தின் பாவங்களை எடுத்துப் போடுகிற தேவ ஆட்டுக்குட்டியே இயேசு.

முழுமையான நீதியை அடைவதற்காக தேவனுடைய உத்தம பலியாக இயேசு அருளப்பட்டுள்ளார். எக்காலத்திற்கும், எல்லா பாவத்திற்கும், ஒரே பலி. (யோவான் 1:29, எபிரேயர் 10:10)

இயேசுவை விசுவாசிப்பதின் மூலம், நம் பாவம் தேவனால் மறக்கப்பட்டு, நாம் அவருடைய நீதியைப் பெறுகிறோம். (எபேசியர் 2:8, ரோமர் 3:22). நாம் தேவனுடைய சிங்காசனத்தைக் கிட்டிச் சேர்ந்து அவரை எங்கள் தகப்பனே என்று அழைக்கலாம். (மத்தேயு 6:9, லூக்கா 11:2) இயேசு இதை சாதித்துள்ளார். (யோவான் 14:6)

நான் மொத்தத்தில் நல்ல நபர். எனக்கும் இயேசு தேவையா?

பாவம் என்றால் 'குறி தவறுதல்,' முழுமையான நீதியை எட்டமுடியாமல் போவது. பாவம் நினைத்துச் செய்ததாகவோ, நினையாமல் செய்ததாகவோ இருக்கலாம். உனக்குச் செய்யப்பட்ட தவறுகளையும், நீ மற்றவர்களுக்குச் செய்த தவறுகளையும் பாவமாகக் கருது. மிகச் சிறந்த சிந்தனையோடும் கூட நாம் குறி தவறியிருக்கிறோம். (ரோமர் 3:23) (ரோமர் 6:23)

நாம் வாழ்ந்துள்ள வாழ்க்கையின் அடிப்படையில் அல்லாமல், தேவனுடைய ஈவாகிய வாழ்வு நம் அனைவருக்கும் அருளப்படுகிறது.

தேவகுமாரனுடைய தியாகத்தினால் அவரோடு நமக்குள்ள உறவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இயேசு நம் பாவங்களுக்காக மரித்து, மரணத்திலிருந்து உயிரோடு எழும்பினார் என்று ஒத்துக்கொள்ளும்போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம். (கலாத்தியர் 3:26) (ரோமர் 10:9)

நம்முடைய நற்செயல்கள் தேவன் நம்மை அதிகமாக நேசிக்கவும், நம்முடைய பாவம் தேவன் நம்மைக் குறைவாக நேசிக்கவும் செய்வதில்லை. நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததன்மூலம் தேவன் தம்முடைய அன்பைக் காட்டியுள்ளார். (ரோமர் 5:8) நாம் பாவிகளாக இருக்கும்போதே, தேவன் தம்முடைய மகனைக் கொடுத்திருக்கும்போது, நாம் அவருடைய பிள்ளைகளாயிருக்கும்போது நமக்கு எதைக் கொடாமல் இருப்பார்?

நீ சீர்குலைந்திருக்கும்போது பாரப்படவோ, தகுதியில்லாமையை உணரவோ தேவையில்லை, நாம் அனைவரும் தகுதியற்றவர்களே, இருப்பினும் தேவன் நம்மை நேசிக்கிறார். (ரோமர் 3:23), (1தீமோத்தேயு 1:15)

நம் வாழ்வு மாற்றமடைந்ததற்கு அடையாளமாக நம்வாழ்வில் நற்செயல்கள் காணப்படவேண்டும், ஆனால் நம் நற்செயல்கள் நம்மை தேவனுக்கு முன்பாக நீதிமானாக்க முடியாது (எபேசியர் 2:8) (மத்தேயு 15:4) (மத்தேயு 5:16). இவை எல்லாம் இயேசுவைப் பற்றியது.

தேவன் பாவிகளை வெறுக்கவில்லை. அவர் மக்களை நேசிக்கிறார். நாம் மனந்திரும்பி, அவரிடம் வந்து, அவர் அருளும் ஈவாகிய வாழ்வைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர் விரும்புகிறார். (லூக்கா 5:32) (ரோமர் 5:8) (லூக்கா 15:10)


இயேசு ஏன் "கிறிஸ்து" என்று அழைக்கப்படுகிறார்?


கிறிஸ்து (மேசியா) தேவனுடைய ஆட்டுக்குட்டி. அவர் மோசேயாலும் தீர்க்கதரிசிகளாலும் அறிவிக்கப்பட்டுள்ளார். (உபாகமம் 18:15) (அப்போஸ்தலர் 3:22) (யோவான் 5:46). ஒவ்வொரு வருடமும் பாவங்களுக்காக ஆட்டுக்குட்டிகள் பலியிடப்பட்டன. தேவ ஆட்டுக்குட்டியோ உத்தமமான பலி. எக்காலத்திற்கும், எல்லா பாவத்திற்கும் ஒரேபலி (யோவான் 1:29) (எபிரேயர் 10:10)

நீ இப்போதே விசுவாசத்தினால் ஜெபத்தின் மூலம் இயேசுவை ஏற்றுக் கொள்ளலாம்: (ஜெபம் என்றால் தேவனோடு பேசுவது)

தேவன் உன் இருதயத்தை அறிவார். உன் வார்த்தைகளைக் காட்டிலும் உன் மனோபாவத்தின் மீதே அவர் அக்கறைகொள்கிறார். கீழ்க்கண்டவாறு ஜெபிக்கலாம்:

"கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்குத் தேவை. என் பாவங்களுக்காகச் சிலுவையில் மரித்ததற்காக நன்றி. என் வாழ்வின் கதவைத் திறந்து உம்மை என் இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கிறேன். என் பாவங்களை மன்னித்து, எனக்கு நித்திய வாழ்வை அளித்ததற்காக நன்றி. என் வாழ்வின் சிங்காசனத்தை உம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். நீர் விரும்பும் விதமாக என்னை மாற்றி அமையும்."


இந்த ஜெபம் உன் இருதயத்தின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறதா? அப்படியிருக்குமானால், இப்போதே இந்த ஜெபத்தைச் செய்ய உன்னை அழைக்கிறேன். கிறிஸ்து, அவர் வாக்களித்தபடியே உன் வாழ்வில் வந்து சேர்வார்.


இயேசு திரைப்படம்.

Thank you to the World Bible Translation Center for translating this message into Hindi. The "Who Is Jesus" message is in the public domain. Please copy and distribute.

 
IFB1000